HOME»NEWS»TAMIL-NADU»national parties not worthy in tamil nadu says kp munusamy skd

தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை - பா.ஜ.கவுக்கு கே.பி.முனுசாமி மீண்டும் மறைமுக தாக்கு

தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்று அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை - பா.ஜ.கவுக்கு கே.பி.முனுசாமி மீண்டும் மறைமுக தாக்கு
கே.பி.முனுசாமி
  • Share this:

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார். அப்போது அவர், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த நேரத்தில் அதிமுக தொண்டர்களை கடந்து நாடே அவர் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் என்ன பேசுவார் என்று எதிர்பார்த்து இருப்பார்கள். அந்த வகையில் அதிமுகவில் கடுமையான சூழல் நிலவிய நேரத்தில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக என்னும் ரயில் இன்ஜினை நான் இயக்க தொடங்கிவிட்டேன். இதில் ஏறுவதற்கு விருப்பம் உள்ள நபர்கள் ஏரி கொள்ளலாம் என்று எதிர்கட்சிகள், கூட்டணி கட்சிகள், அதிமுக கட்சியில் வேறு கருத்து கொண்டவர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் பேசினார்.

அதுபோன்று ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கட்சியில் ஆளுமை இல்லாத நேரத்தில் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு வழங்கும் அனைத்து விருதுகளையும் வென்று அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரிடமும் ஜெயலலிதா உள்ளார் என்பதை நிரூபித்து உள்ளார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை அவர்கள் ஒன்று அதிமுக அல்லது திமுக மேல் ஏறிதான் பயணம் செய்யவேண்டும். தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் மாமன் மச்சான் என ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தங்களுடைய தலைவர்கள் மற்றும் கொள்கைகளுக்கு பின் நிற்பார்கள். ஆனால் தேசிய கட்சிகளை பொறுத்தவரை இதை வெளியே நின்று வேடிக்கை மட்டும்தான் பார்ப்பார்கள். அவர்களால் இங்கு எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என்று கூறினார்.



தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் மற்றும் அரசியல் காழ்புணர்வு கொண்ட நபர்கள் சிறையில் இருந்து சசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இங்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என்று கூறிய அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் அவருக்கு நிறைய வேலைகள் உள்ளது என்று கூறிய அவர் இந்த கட்சியில் ஸ்லீப்பர் செல் உள்ளது என்று கூறி வந்தாலும் இங்கு அப்படி யாரும் இல்லை யாரும் இயக்கத்தை விட்டு வெளியே செல்லமாட்டார்கள் என்று கூறினார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: