Home /News /tamil-nadu /

மருத்துவ மாணவர்களுக்கு மகரிஷி சரகா உறுதிமொழி : தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பில் தமிழ்நாடு நிலைப்பாடு என்ன?

மருத்துவ மாணவர்களுக்கு மகரிஷி சரகா உறுதிமொழி : தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பில் தமிழ்நாடு நிலைப்பாடு என்ன?

மருத்துவ மாணவர்கள்

மருத்துவ மாணவர்கள்

மருத்துவ மாணவர்களுக்கு மகரிஷி சரகா உறுதி மொழி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மருத்துவ படிப்பை முடித்துவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வரும் மாணவர்கள் இனி மகரிஷி சரகா உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.

    இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மருத்துவ சேவையாற்ற செல்லும் மாணவர்களுக்கு white coat ceremony என்ற நிகழ்ச்சி நடைபெறுவது மரபு. இதற்கு ஹிப்போக்ரேட்ஸ் உறுதிமொழி எனப் பெயர். கி.மு 400-களில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஹிப்போக்ரட்ஸ் மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். மருத்துவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளையும் ஏற்படுத்தினார்.

    இவரின் அரிய மருத்துவக் கோட்பாடுகளை கடைப்பிடிக்கும் விதமாக மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக சேவையாற்ற செல்லும்போதும், பட்டம் பெறுவதற்கு முன்பாகவும் ஹிப்போக்ரேட்ஸ் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அதில், திறமை மற்றும் முடிவெடுக்கும் திறன் அடிப்படையில் உறுதிமொழியை நிறைவேற்றுவேன். மாணவர்கள் தமது சக்திக்கு உட்பட்டு, எந்தத் தீங்கும் செய்யாமல், நியாமான வகையில் நோயாளிகளைக் காத்து நிற்போம் என்று உறுதி மொழி ஏற்பர்.

    இதை தற்போது தேசிய மருத்துவ ஆணையம் மாற்றி மகரிஷி சரகாவின் "சரக சம்ஹித" என்ற நூலின்படி புதிய உறுதிமொழி உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    அந்த நூலில் நோயாளிகளை கவனிப்பவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாகவும், மருத்துவர்கள் மாமிசம் சாப்பிடக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பசுக்கள், பிராமணர்கள் உட்பட அனைவரின் நலனுக்காக வழிபட வேண்டும் என்றும் எந்த குற்றமும் செய்யாதவராக, சொந்த நலனுக்காக நோயாளிக்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புதிய உறுதிமொழி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    ரூ.1 கோடி இரிடியம் என நினைத்து செம்பு உலோகத்தை திருடிய கும்பல் கைது: போலி புகார் அளித்த தம்பதியும் கைது- ஓசூரில் பரபரப்பு

    ஆட்டுக்கறியை மருந்தாக பரிந்துரைத்த சரக மஹரிஷி, மாமிசத்துக்கு எதிரானவர் அல்ல என்பது அவர் சார்ந்த ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது என்றும் ஆயுர்வேத மருத்துவர் ஜெயகர் விளக்கமளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் இந்த உறுதி மொழி மாற்றம் மாநில சுகாதார துறை அனுமதி அளித்த பிறகே நடைமுறைக்கு வரும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் நடவடிக்கையா அல்லது, நவீன மருத்துவ முறையில் வலுக்கட்டாயமாக ஆயுர்வேதம் திணிக்கப்படுகிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Medical Students

    அடுத்த செய்தி