தேர்தல் பிரச்சாரங்களில் சரியான மொழிபெயர்ப்புக்கு ஆள் இல்லாமல் தடுமாறும் தேசியத் தலைவர்கள்

தேர்தல் பிரச்சாரங்களில் சரியான மொழிபெயர்ப்புக்கு ஆள் இல்லாமல் தடுமாறும் தேசியத் தலைவர்கள்

ராகுல் காந்தி

பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர்களது பேச்சை மொழி பெயர்ப்பது பெரும் சவாலானதாகவே இருந்துவருகிறது.

  • Share this:
    வடஇந்தியாவிலிருந்து வரும் தேசியக் கட்சித் தலைவர்களின் தேர்தல் பரப்புரைகள் முறையாக மொழிபெயர்க்கப்படாதது, ஒவ்வொரு தேர்தலிலும் நகைச்சுவைக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.

    தேர்தல் களத்தில் அனல்பறக்கும் ஏகவசனங்களும், எண்ணிலடங்கா வாக்குறுதிகளுக்கும் பஞ்சமில்லை... ஆனால் அண்மைக்காலமாக மொழிபெயர்ப்பு சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் மாறி வருகிறது தேர்தல் களம். குறிப்பாக இந்தி, ஆங்கிலம் பேசும் தேசியத் தலைவர்களுக்கு, முறையாக தமிழ் மொழிபெயர்ப்பு செய்வதற்கு ஆளில்லாமல் தவித்து வருகின்றன இருபெரும் தேசியக் கட்சிகள்.

    பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவில் தொடங்கிய இந்த பயணம், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வரை நீண்டுகொண்டே செல்கிறது. 2018ம் ஆண்டு ஜுலை மாதம் தமிழகம் வந்திருந்த அமித் ஷா பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்ட MICRO IRRIGATION என்ற சொல்லை, ஹெச்.ராஜா சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்தது நகைப்புக்குள்ளானது.

     



     

    இதேபோன்று, 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உரையை கே.வி. தங்கபாலு மொழிபெயர்த்ததும் கிண்டலுக்கு உள்ளானது.


    அதன்பின்னர் ராகுலின் மற்றொரு பரப்புரையிலும் மொழிபெயர்ப்பாளர் தடுமாறியது விமர்சனத்துக்கு உள்ளானது.

     



     

    இந்தநிலையில் அண்மையில் புதுச்சேரியில் மூதாட்டி ஒருவர் ராகுல் காந்தியிடம் கூறிய குற்றச்சாட்டை, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தன்னை பாராட்டியதாக குறிப்பிட்டு செய்த அந்தர்பல்டி TRANSLATION, ஒட்டுமொத்த சமூகவலைதளங்களையும் ஆக்கிரமித்தது.

     



     

    தேர்தல் நெருங்கும் சூழலில், முறையான மொழிபெயர்ப்பாளர்களை கொண்டு தேசியத் தலைவர்கள் உரையை மேற்கொண்டால் மட்டுமே, இத்தகைய இணைய ட்ரோல்கள் குறையும் என்பதில் சந்தேகமில்லை.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    சிறந்த கதைகள்