எட்டுவழிச்சாலை திட்டம்: வனப்பகுதியை குத்தகைக்கு கேட்கும் நெடுஞ்சாலை துறை!

முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டவுள்ள 6 வழிச் சாலை திட்டத்திற்கு வனப்பகுதியை குறைத்திருப்பதால், அதற்கு பதிலாக வனம் அல்லாத பகுதிகள் கையகப்படுத்தப்படவுள்ளன.

சதீஷ் லக்‌ஷ்மணன் | news18
Updated: March 15, 2019, 11:13 AM IST
எட்டுவழிச்சாலை திட்டம்: வனப்பகுதியை குத்தகைக்கு கேட்கும் நெடுஞ்சாலை துறை!
சேலம் 8 வழிச்சாலை- பார்வையிடும் வனத்துறை அதிகாரிகள்
சதீஷ் லக்‌ஷ்மணன் | news18
Updated: March 15, 2019, 11:13 AM IST
சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு 33 ஹெக்டேர் வனப்பகுதியை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக, தமிழக வனத்துறையிடம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விண்ணப்பித்துள்ளது.

சென்னை - சேலம் இடையே 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழிச்சாலை அமைக்க, கடந்த ஆண்டு திட்டமிட்ட மத்திய அரசு, நிலத்தை கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியது. எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு தேவையான 2, 560 ஹெக்டேரில் பெரும்பாலான பகுதி விவசாய நிலம் என்பதால், அவற்றை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இத்திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன.

வனத்துறையிடம் சமர்பித்த விண்ணப்பம்


தொடர்ச்சியான எதிர்ப்பின் காரணமாக, 2, 560 ஹெக்டேருக்கு பதிலாக 1,900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையக்கப்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்தது. இதில் 120 ஹெக்டேர் வனப்பகுதிக்கு பதிலாக 45 ஹெக்டேர் வனப்பகுதி மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது.

மேலும், முதற்கட்டமாக 6 வழிச்சாலையாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் திட்ட அறிக்கையை மாற்றியது. இதையடுத்து கையகப்படுத்தப்படும் வனப்பகுதியை மேலும் குறைக்க முடிவு செய்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழக வனத்துறையுடன் இணைந்து ஆய்வு செய்தது.

மாதிரிப் படம்


அதன்படி, 33 ஹெக்டேர் வனப்பகுதியை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழக வனத்துறையிடம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விண்ணப்பித்துள்ளது. இதில் குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் 3.5 ஹெக்டேரும், திருவண்ணாமலையில் 20.8 ஹெக்டேரும், தருமபுரி மாவட்டத்தில் 3.5 ஹெக்டேரும், சேலத்தில் 5.9 ஹெக்டேரும் என மொத்தம் 33 .8 ஹெக்டேர் வனப்பகுதியை பயன்படுத்திக் கொள்ள விண்ணப்பித்துள்ளது.
Loading...
அளவிடப்படும் வனப்பகுதி


முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டவுள்ள 6 வழிச் சாலை திட்டத்திற்கு வனப்பகுதியை குறைத்திருப்பதால், அதற்கு பதிலாக வனம் அல்லாத பகுதிகள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதனால் திட்டத்திற்கு தேவைப்படும் நிலப்பகுதியின் அளவு 1,900 ஹெக்டேரில் இருந்து, 2,086 ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

Also see... முகிலன் பற்றிய தகவல் கொடுத்தால் சன்மானம் - சிபிசிஐடி
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...