தேசிய கொடியை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு

தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு, எஸ்.வி சேகர் வருத்தம் தெரிவித்த நிலையில், அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய கொடியை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு
எஸ்.வி.சேகர்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 7:46 PM IST
  • Share this:
எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி போர்வை போர்த்தியதற்கும், பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டதற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர், கொடியில் உள்ள வண்ணங்கள் குறித்து தவறான விளக்கத்தை அளித்தாக கூறப்பட்டது.

Also read: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன்

எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதில் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.


கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், முதல்வர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்தார். இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, தேவைப்படும்போது காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் எஸ்.வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading