Home /News /tamil-nadu /

சாய்னா குறித்து அவதூறு பதிவு.. சித்தார்த் மீது நடவடிக்கை கோரி தமிழக காவல்துறைக்கு கடிதம்

சாய்னா குறித்து அவதூறு பதிவு.. சித்தார்த் மீது நடவடிக்கை கோரி தமிழக காவல்துறைக்கு கடிதம்

நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த், சாய்னா நேவால் குறித்து ஆபாச பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சித்தார்த்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காவல் துறைக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

    பிரதமர்  நரேந்திர மோடியின் சமீபத்திய பஞ்சாப் பயணத்தின்போது  பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக தனது நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்தார். பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த வகையில், டென்னிஸ் வீராங்கனையும் பாஜகவை சேர்ந்தவருமான சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில்,  பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டால் எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பிரதமர் மோதி மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் அராஜகவாதிகள் என கூறி #BharatStandsWithModi என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்து ரி-டிவிட் செய்த நடிகர் சித்தார்த், சாய்னா நேவால் குறித்து ஆபாச பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சித்தார்த்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: யாரெல்லாம் பூஸ்டர் தடுப்பூசி போடலாம்? அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை


    இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதை தொடர்ந்து பெண் வீராங்கனையை அவதூறாக தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி  தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தேசிய மகளிர் ஆணையத்தின்தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் படிக்க: தமிழகத்தின் வளர்ச்சியை பிற மாநிலங்கள் அல்ல,பிற நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


    இதனிடையே தான் தவறாக குறிப்பிடவில்லை என்றும் தான் பயன்படுத்திய வார்த்தைக்கு விளக்கமளித்தும் நடிகர் சித்தார்த் மற்றொரு ட்விட் வெளியிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Actor Siddharth, Saina Nehwal, Twitter, Women

    அடுத்த செய்தி