வளர்ச்சிப்பணிகளை புயல் வேகத்தில் செய்வேன் - நத்தம் விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன்

நத்தம் சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் சாலை சாக்கடை தெருவிளக்குகள் போன்றவை  பூர்த்தி அடைந்துள்ளன...

 • Share this:
  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டம் தொகுதி 234 தொகுதிகளில்  அம்மா தொகுதிக்கு அடுத்தபடியாக சிறப்புற்று விளங்குவதாகவும், வளர்ச்சிப்பணிகளை புயல் வேகத்தில் செய்வேன் என்றும் கூறி நத்தம் விஸ்வநாதன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நத்தம் விசுவநாதன் ஆவிச்சி பட்டியில் உள்ள பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்து வந்தார்.

  அப்போது அவர் பேசுகையில், “நத்தம் சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் சாலை சாக்கடை தெருவிளக்குகள் போன்றவை  பூர்த்தி அடைந்துள்ளன.  தமிழகத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு நத்தம் பேருந்து நிலையம் சிறப்பு பெற்றுள்ளது.

  மாநிலத்தில் சட்டமன்றத் தொகுதிக்கான 234 தொகுதிகளில் அம்மாவின் தொகுதிக்கு அடுத்த படியாக, இந்த நத்தம் சட்டமன்ற தொகுதி சிறப்புற்று விளங்குகிறது இந்தத் தொகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

  Must Read :  பாதாள சாக்கடை மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு- உயர் நீதிமன்றம்

   

  மீண்டும் என்னை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள். நான், வளர்ச்சிப்பணிகளை புயல் வேகத்தில் செய்வேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
  Published by:Suresh V
  First published: