கீழடி அகழாய்வில் நடராஜர் சிலை கண்டெடுப்பா...? தொல்லியல் துறை உயரதிகாரி விளக்கம்

கீழடி  அகழாய்வில் நடராஜர் சிலை சமூக வளைதளங்களில் வருவது குறித்து நியூஸ் 18தமிழ்நாடுக்கு தொல்லியல் துறை  துணை இயக்குனர் சிவானந்தம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

கீழடி அகழாய்வில் நடராஜர் சிலை கண்டெடுப்பா...? தொல்லியல் துறை உயரதிகாரி விளக்கம்
சமூக வலைத்தளங்களில் தவறாக பரவி வரும் நடராஜர் சிலை
  • Share this:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நான்கு இடங்களில் நடந்து வருகின்றன. அதில் மணலூர், கொந்தகை அகரம் ஆகிய இடங்களில் பிப்ரவரி 19 தொடங்கி அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடியில் நடந்து வரும் அகழாய்வு குழியில் ஏற்கனவே பானைகள், வடிகால் அமைப்பு, விலங்கின எலும்புகள் ஆகியன கண்டுபிடிக்க பட்டன.

அகழாய்வு தொடர்ந்து நடந்து வரும் நிலையில், சில நாட்களாக சமூக வலைதளங்களில் கீழடியில் நடராஜர் சிலை எடுத்தாக  வீடியோ ஒன்று உலா வருகின்றன. இது குறித்து நியூஸ் 18-க்கு தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம்  சிறப்பு பேட்டி அளித்தார்.மேலும் படிக்க...

LOCKDOWN | தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதிவரை நீட்டிப்பு

அப்போது அவர் கூறுகையில், சமூக வலைதளங்களில் வருவது போல கீழடியில் நடராஜர் சிலை எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. சிலர் தவறான தகவல்கள் பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்.மேலும், கொரோன வைரஸ் பரவல் காரணமாக கடந்த  மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கிடையது என்றும், தொல்லியல் துறை நியமித்த பணியாளர்கள் தவிர யாரும் குழிக்குள் இறங்க முடியாது என்றும் தெரிவித்தர்.

இது போன்று போலியான வீடியோக்களை யாரும் பதிவிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading