ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவர்கள்... அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி தவிப்பு!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவர்கள்... அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி தவிப்பு!
நரிக்குறவர்கள் (கோப்புப் படம்)
  • Share this:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்கள் கொரோனா ஊரடங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அடுத்தவேளைக்கு உணவின்றி தவித்து வருகின்றனர்.

சென்னையில் பல்லாவரம், வண்டலுார், சேலையூர், மப்பேடு, திருவான்மியூர், மேடவாக்கம் என பல பகுதிகளில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். நகரம் முழுவதும் சென்று பாசி, ஊசி, மணி, ருத்ராட்சம் விற்கும் இவர்களில், ஆண்கள், கூலி வேலைகளுக்கும், கழிவுகளை சேகரித்து விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர்.

தற்போதைய ஊரடங்கினால் பாசி ஊசி மணி விற்பனை தொழில் பாதிக்கப்பட்டு, அன்றாட வேலைகளும் கிடைக்காமல் போய் விட்டன.


வீட்டை விட்டு இவர்கள் வெளியேற முடியாத நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதிகளில் அரசு துாய்மைப் பணியாளர்கள் கூட வந்து துாய்மைப் பணிகளை மேற்கொள்வதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

பாசி, ஊசிமணி விற்று அன்றாடம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நகர்த்தும் இவர்கள் தற்போது அடுத்த வேளை உணவுக்கு பிறர் கையை எதிர்நோக்க வேண்டிய அவலநிலையில் உள்ளனர். அரசும் பொதுமக்களும் தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see...
First published: April 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading