ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி - செய்தித் தொடர்பாளர் நாராயணன்

ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு பாஜக-விற்குக் கிடைத்த வெற்றி என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் கூறியுள்ளார்.

ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு பாஜகவுக்கு கிடைத்த வெற்றி - செய்தித் தொடர்பாளர் நாராயணன்
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன்.
  • Share this:
மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில் மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்குவதில் சட்ட ரீதியாக எந்தச் சிக்கலும் இல்லை எனத் தெரிவித்திருப்பதோடு, மருத்துவ கவுன்சில் செயலர், தமிழக சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்டோர் அடங்கிய 3 நபர் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் அது இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், OBC இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடிப்படை ஆதாரம் இன்றி திமுக, காங்கிரஸ் கட்சிகள் பாஜக-வை விமர்சிக்கின்றன.


Also read: ஓ.பி.சி. இடஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - எம்.பி வில்சன்

பாஜக கொண்டுவந்த மண்டல் ஆணையத்தைக் கிடப்பில் போட்டது காங்கிரஸ்; இப்போது பாஜக மீது காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது எனக் குறிப்பிட்ட நாராயணன், வரலாற்றுப் பின்னணியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தவர்கள், திமுக - காங்கிரஸ் கட்சிகள்தாம் எனத் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், கறுப்பர் கூட்டம் என்னும் காட்டுமிராண்டிகளை பாஜக கண்டித்ததால் அந்தப் பிரச்னையை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் OBC இட ஒதுக்கீடு குறித்து முழுமையாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு பாஜக-விற்குக் கிடைத்த வெற்றி. தீர்ப்பின் இவ்வாறு வந்திருப்பதன் மூலம் திமுக இதை வைத்து அரசியல் செய்தது தெளிவாகியிருக்கிறது.இட ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டம் இயற்ற வேண்டிய நிலை ஏற்படாது; அப்படி சட்டம் இயற்ற வேண்டுமென்றால் பாஜக சட்டம் இயற்றும் என்று நாராயணன் தெரிவித்தார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading