புல்லட் பைக் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நன்னிலம் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்...

நன்னிலம் வேட்பாளார் பாத்திமா பர்கானா

புல்லட் பைக் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் நன்னிலம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் பாத்திமா பர்கானா.

  • Share this:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் பாத்திமா பர்கானா எம்பிஏ பட்டதாரி ஆவார். சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்து களத்தில் இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளான நன்னிலம் நகரம், அச்சுதம்பேட்டை, திருவாஞ்சியம், வாழ்க்கை, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புல்லட் பைக்கை ஓட்டிச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெண்கள் தற்காலத்தில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றாலும் பல ஆண்களே ஓட்ட தயங்கும் புல்லட் பைக் ஓட்டி நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரான பாத்திமா பர்கானா பல கிலோமீட்டர்கள் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மக்களிடையே பேசுபொருளாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க... திருச்சி காவல்நிலையங்களில் தபால் வாக்கிற்கு தரப்பட்ட பணம் பறிமுதல் தொடர்பான வழக்கு... சிபிஐ விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை

செய்தியாளார்: செந்தில்குமரன், திருவாரூர்உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: