அமைச்சர் மா.சு.வின் சலிக்காத கால்களுக்கு என் முத்தங்கள் - நாஞ்சில் சம்பத் வாழ்த்து

நாஞ்சில் சம்பத் - மா.சுப்ரமணியன்

மா.சு.வின் கால்கள் மான்களின் கால்கள் என நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    அடர்ந்த வனப்பகுதியில் உயர்ந்த மலையின் உச்சியில் பதினைந்து கிலோமீட்டர் நடந்து மக்கள் குறைகேட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நாஞ்சில் சம்பத் பாராட்டியுள்ளார்.

    கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் பல்வேறு சுகாதார பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த அவர், இரவு கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்தில் தங்கினார். அதனைத் தொடர்ந்து கொடகரை, காமகிரி, மூக்கன்கரை மலைக்கிராமங்களில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மூக்கன்கரை மலைக்கிராமத்தில் வீடு, வீடாக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    பின்னர், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்டம் மூக்கன்கரை மலைக்கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி பகுதிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணமாக சென்றார். அங்கே செல்லும் வழியில் இருந்த மலைக்கிராம மக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.

    Must Read : கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு

    இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “இங்குள்ள மலைக்கிராம மக்கள் சுகாதார நிலையம், 108 அவசர ஆம்புலன்ஸ் வசதி, பேருந்து வசதி, மின்சார வசதி, பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர்கள் என்பன போன்ற பல கோரிக்கைகள் வைத்துள்ளனர். தற்போது கொடகரை, காமகிரி கிராமங்களுக்கு அவசர சிகிச்சைக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அரசு துணை சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மலைக்கிராமத்தில் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

     



    இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் இந்த செயலைப் பாரட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாஞ்சில் சம்பத், “மா.சு.வின் கால்கள் மான்களின் கால்கள். அடர்ந்த வனப்பகுதியில் உயர்ந்த மலையின் உச்சியில் பதினைந்து கிலோமீட்டர் நடந்து மக்கள் குறைகேட்ட அமைச்சர் மா.சு.வின் சலிக்காத கால்களுக்கு என் முத்தங்கள்” என்று குறிப்பிட்டு பாரட்டு தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: