நாங்குநேரியில் சுயேட்சை வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி!

நாங்குநேரியில் சுயேட்சை வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி!
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
  • News18
  • Last Updated: October 24, 2019, 2:46 PM IST
  • Share this:
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுயேட்சையாக களமிறங்கிய ஹரி நாடாரை விட குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.

இதன் மூலம், திமுக, காங்கிரஸ் வசமிருந்த தொகுதிகளை அதிமுக தற்போது தனதாக்கியுள்ளது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளரை தவிர போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.


அதிமுக, காங்கிரஸ் தவிர்த்து மிக முக்கியமாக பார்க்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் ராஜ நாராயணன், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஹரி நாடாரை விட குறைந்த வாக்குகளே பெற்றுள்ளார்.

16-வது சுற்றின்படி நாம் தமிழர் கட்சி 2662 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் ஹரி நாடார் 3166 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

நாங்குநேரி தொகுதியில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த நிலையில், அந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த வசந்தகுமார், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆன நிலையில், இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading