Home /News /tamil-nadu /

தமிழக மாணவர்கள் யாருக்கு சளைத்தவர்கள் இல்லை.. நான் முதல்வன் திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக மாணவர்கள் யாருக்கு சளைத்தவர்கள் இல்லை.. நான் முதல்வன் திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

பல்வேறு துறைசார் படிப்புகளைப் பற்றி பெற்றோர் மற்றும் மாணவர்கள் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தமிழ்நாடு முதலமைச்சர், இன்று (29-8-2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “நான் முதல்வன்” என்னும் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்

    பின்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், " தமிழ்நாட்டு இளைஞர்களைப் படிப்பில்,சிந்தனையில், ஆற்றலில் மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நான் மட்டும் முதல்வன் அல்ல; அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வனாக வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்டதே இத்திட்டம். என்னுடைய கனவு திட்டமான இது, தற்போது செயல்வடிவம் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்தார்.

    திட்டத்திற்கான தேவைகள் குறித்து பேசிய அவர், "  அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. நாட்டிற்கே வழிகாட்ட  கூடிய ஆட்சியாகவும் இருந்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்திற்கு வருகின்றன. அதற்கேற்ப, மனித வளங்களை உருவாக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உண்டு. அதனை மனதில் வைத்து, மாணவர்களின் முழு திறனையும் வெளிக்கொண்டு வரும் நோக்கில் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    நமது  இளைஞர்களை தொழில் நிறுவனங்களின் தற்போதைய தேவைக்கேற்ப திறன்படைத்தவர்களாக உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், மாணவர்கள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியைப் பற்றி பேசிய அவர், " பல்வேறு துறைசார் படிப்புகளைப் பற்றி பெற்றோர் மற்றும் மாணவர்கள் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் தங்கள் விருப்பங்களை குழந்தைகளிடம் சொல்லலாம்; வழிகாட்டலாம், ஆனால் திணிக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.

    நம்முடைய இளைஞர்கள் மற்ற மாநிலங்களை விட திறமையானவர்கள். அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. வழிகாட்டி மற்றும் உந்துசக்தி ஆதரவு வழங்கினால் நமது இளைஞர்களின் திறமை மேலும் வெளிச்சத்திற்கு வரும் என்று தெரிவித்தார்.    

    இதையும் வாசிக்க:'நான் முதல்வன்' திறன் மேம்பாட்டுத் திட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்

    நமது மாணவர்கள் சர்வதேச நிறுவனங்களில் பணிபுரிய வேண்டும். தலைமைத்துவ திறன்களையும்,ஆங்கில பேச்ச்சாற்றாலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் முதல்வன் திறன் மேம்பாட்டுத்  திட்டத்தின்  அனைத்து கல்லூரிகளிலும் ஆங்கில பேச்சாற்றால் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: CM MK Stalin

    அடுத்த செய்தி