பெண்களுக்கு டிக்கெட் விலை ரூ.2 மட்டுமே... வெறிச்சோடியதால் விலையை குறைத்த டவுன்பஸ்

அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற நிலையில், நாமக்கல்லில் உள்ள தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று மகளிருக்கு கட்டணச் சலுகை வழங்கியுள்ளது.

 • Share this:
  முதலமைச்சராக பதவியேற்றவுடன் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 கோப்புகளில் முக்கியமானது, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசம். இந்த திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலரும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கே பெண்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

  Also Read : பெண்களுக்கு மட்டும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்க அனுமதியளித்தது ஏன்? தமிழக அரசு விளக்கம்

  இதனால் பெரும்பாலான தனியார் டவுன் பஸ்கள் கடந்த 2 நாட்களாக வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்நிலையில் அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளிக் கொடுக்கலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப, நாமக்கல்லை சேர்ந்த எஸ்.எம்.ஆர். என்ற பேருந்து நிறுவனம் மகளிருக்கு கட்டணச் சலுகை அளித்திருக்கிறது.

  Also Read : தமிழகத்தில் எந்தெந்த பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்?

  அதாவது ரூ.10 கட்டணம் என்றால் அதில் ரூ.2 மட்டும் செலுத்தி பெண்கள் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிக்கெட் விலையில் 8 ரூபாயை குறைத்து அது தொடர்பான தகவலை பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் போஸ்டர் அடித்தும் ஒட்டப்பட்டுள்ளது. அரசுடன் போட்டிபோட்டு இலவச டிக்கெட் தரமுடியாவிட்டாலும் பெண்களுக்கு நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  தற்போது ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதால், மீண்டும் பேருந்து சேவை தொடங்கும் போது இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: