பா.ஜ.கவில் இணைந்தது ஏன்? நடிகை நமீதா விளக்கம்

பா.ஜ.கவில் இணைந்தது ஏன்? நடிகை நமீதா விளக்கம்
பா.ஜ.கவில் இணைந்த நமீதா
  • News18
  • Last Updated: November 30, 2019, 9:03 PM IST
  • Share this:
எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பா.ஜ.கவில் இணைந்த நமீதா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா செல்ல வந்தார். அப்போது ஜே.பி. நட்டா முன்னிலையில் நடிகை நமீதா பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, ‘பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து உள்ளேன். தமிழக மக்களுக்கு உதவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஜெயலலிதா ஆசிர்வாதத்துடன் பா.ஜ.கவில் இணைந்து உள்ளேன். பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கவனம் செலுத்தி வந்தேன். இப்போது விலங்குகள் நலனிலும் அக்கறை செலுத்தி வருகிறேன்.


கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் செயல்பாடுகளைக் கவனித்து வருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காகவும் பெண்கள் நலனுக்காகவும் குழந்தைகள் கல்வி உள்பட பல திட்டங்களை செய்து வருகிறார். பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு திட்டங்கள் கவர்ந்ததால் பா.ஜ.க.வில் இணைந்தேன். பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் நலனை தான் ஜெயலலிதா கொண்டு இருந்ததார்.

பா.ஜ.க.வில் பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. விரைவில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். எந்தவொரு சூழ்நிலையில் மக்களுக்கு எப்படி சேவை செய்ய முடியும் என்பதை பார்த்து தான் அரசியல் கட்சிகளில் இனைக்கிறோம். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று தெரிவித்தார்.

Also see:

Loading...


First published: November 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...