‘நமீதா அக்கா தமிழ் ஒழுங்கா பேசினீங்கனா ஓட்டு' - கோரிக்கை வைத்த இளைஞர்கள்

நமீதா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து நடிகை நமீதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர், நமீதாவை பார்த்து சரியாக தமிழில் பேசினால், நீங்கள் கூறும் வேட்பாளருக்கு வாக்களிக்கிறோம் என கூறியதால், அங்கே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 • Share this:
  பிரச்சாரத்தில் நமீதா பேசும் போது எல்லோருக்கும் வணக்கம் செளவுக்கியமா ? என கேட்டு விட்டு ஹெச் ராஜா மோடி முத்திரா திட்டம் கொண்டி வந்து உதவி பண்ணியிருக்கார் . மத்திய மாநில அரசு திட்டங்கள் உங்கள் வீடு கொண்டி வரும் என பேசியதற்கு இளைஞர்கள் தமிழ் சரியா பேசுங்க அப்படி பேசிட்டா நீங்க சொல்றவருக்கு ஓட்டு போடுறோம் என்று முனுமுனுத்தனர்

  காரைக்குடி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு தாமரைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட நமீதா பிரச்சாரத்திற்கு வந்தவுடனே பிரச்சார வாகனத்தில் ஏற்கனவே தாமரைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த நிர்வாகிகளை நமிதா வந்துட்டாங்க இறங்குங்க இறங்குங்க என கூற வாகனத்தில் இருந்தவர்களும் கீழே இறங்கினார்கள்.

  நமிதாவை சரக்கு வாகனத்தில் ஏறி பிரச்சாரம் செய்யுங்கள் என கூறியவுடன் இதில் எப்படி ஏறுவது ஏறி செல்வதற்கு வழி இல்லையே ஏற முடியாது என மறுத்து நின்ற நமீதாவுக்கு உடனடியாக ஒரு சிறிய சேர் ஒன்று வரவழைக்கப்பட்டு அதில் ஏறி நிற்க நமிதாவின் பாதுகாவலர் ஒரு கையை பிடித்து பிரச்சார வாகனத்தில் ஏற்றினார்.  பிரச்சாரத்தில் நமீதா பேசும் போது எல்லோருக்கும் வணக்கம் செளவுக்கியமா ? கேட்டு விட்டு ஹெச்.ராஜா மோடி முத்திரா திட்டம் கொண்டி வந்து உதவி பண்ணியிருக்கார் . மத்திய மாநில அரசு திட்டங்கள் உங்கள் வீடு கொண்டி வரும் என பேசியதற்கு இளைஞர்கள் தமிழ் சரியா பேசுங்க அப்படி பேசிட்டா நீங்க சொல்றவருக்கு ஓட்டு போடுறோம் என்று கூறினர்.  பிறகு வீதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நமீதாவை தொண்டர்கள் சூழ்ந்ததும் அவரது கணவர் இரு கைகளையும் தடுப்பு போல் காட்டி தொண்டர்களிடம் இருந்து காப்பாற்றி காருக்கு அழைத்துச் சென்றார்.
  Published by:Sankaravadivoo G
  First published: