ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்

கோயம்பத்தூர், வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பெயர்களின் ஆங்கில முறையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது

ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணை வாபஸ்
கோயம்பத்தூர், வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பெயர்களின் ஆங்கில முறையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது
  • News18
  • Last Updated: June 18, 2020, 9:29 PM IST
  • Share this:
2018-2019 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன், "தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதனை செயல்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்" என்று அறிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரையின் அடிப்படையில், முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களில் தமிழ் உச்சரிப்பில் இருந்து ஆங்கில உச்சரிப்பில் வேறுபாடு உடைய பெயர்களில் திருத்தம் செய்து கடந்த 11-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை ஆங்கிலத்தில் "Triplicane" என்று உச்சரித்து வந்த நிலையில் இனி அதை "Thiruvallikkeni" என்று உச்ச்ரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை என்பதை "Tondiyarpet" என்பதில் இருந்து "Thandaiyaarpettai" என்று திருத்தப்பட்டு உள்ளது. வ.உ.சி நகர் - "V.O.C Nagar" என்பது "VA.OO.SI Nagar" ஆகவும், எழும்பூர் - "Egmore" என்பது "Ezhumboor" ஆகவும் மாற்றப்பட்டது.


கோயம்பத்தூர், வேலூர் ஆகிய ஊர்களின் பெயர் மாற்றங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகின. இந்த நிலையில், இந்த அரசாணையை திரும்ப பெறுவதாக அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.






படிக்கஇந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து


படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு










சென்னையின் பல பகுதியின் பெயர்களும், கடலூர், சிவகங்கை, தர்மபுரி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி, பெரம்பலூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், விழுப்புரம், சேலம், வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,018 ஊர் பெயர்களிலும் திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அமைச்சர் பாண்டிய ராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு ஒலிபெயர்ப்பு தரநிலைகள் குறித்த நிபுணர்களின் கருத்துக்களை சீரமைப்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அனைத்து தரப்பினரின் கருத்து கேட்டு புதிய அரசாணை வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading