குடும்ப பிரச்னையால் 300 அடி பள்ளத்தில் குழந்தைகளை வீசி கொன்ற தந்தை

குடும்ப பிரச்னையால் 300 அடி பள்ளத்தில் குழந்தைகளை வீசி கொன்ற தந்தை
கொலை செய்யப்பட்ட குழந்தைகள்
  • News18
  • Last Updated: November 14, 2019, 1:23 PM IST
  • Share this:
குடும்ப பிரச்னை காரணமாக தனது இரு குழந்தைகளை 300 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது மனைவி பாக்கியம். கிரிதாஸ், கவிதர்ஷிணி என்ற இரண்டு குழந்தைகளோடு வசித்து வந்த கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த பாக்கியம் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மாமனார் வீட்டிற்கு சென்ற சிரஞ்சீவி, அவர்களிடம் சமாதானம் பேசி குழந்தைகள் இருவரை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார்.


அதன் பிறகு குழந்தைகளைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாததால் சந்தேகமடைந்த பாக்கியம், வாழவந்திநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சிரஞ்சீவியைப் பிடித்து போலீசார் விசாரித்த போது சீக்குப்பாறை என்னும் இடத்தில் உள்ள வியூபாயிண்டில் இருந்து இரு குழந்தைகளையும் வீசியெறிந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Also see...

Loading...

First published: November 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com