குளிர் பதனக் கிடங்கு: ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு! பட்ஜெட்டில் நாமக்கல் மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

குளிர் பதனக் கிடங்கு: ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு! பட்ஜெட்டில் நாமக்கல் மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
கோப்புப்படம்.
  • Share this:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கும் கோழி முட்டை உற்பத்தி, லாரி பாடி கட்டும் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பும், முட்டை உற்பத்தியும் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினசரி மூன்று முதல் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதால் அவற்றை பாதுகாக்க குளிர் பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.


முட்டைகள் லாரி மூலமாக எடுத்துச் செல்லப்படுவதால் சுங்கக் கட்டத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது. லாரிகளுக்கு பாடி கட்டும் தொழிலுக்கும் பிரபலமானது நாமக்கல்தான். நலிவடைந்து வரும் இந்தத் தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 9 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பதும் இவர்களின் பிராதன கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

போர்வெல் லாரிகளைப் பொறுத்தவரை தற்போது ஆழ்துளை கிணறுகள் அமைக்க அதிக அளவில் தேவை இருப்பதால் டீசல் விலையை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஃபாஸ்டேக் கட்டணங்களில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.   பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு கூடுதல் நிதி, பத்ம விருதுகளில் 50 விழுக்காட்டை விவசாயிகளுக்கென ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Also see:
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading