சிறிய சாயக்கழிவு ஆலைகளுக்கு மட்டுமே சீல்: அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆலையில் இருந்து வெளியேரும் சாயக்கழிவு நீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் சாயக்கழிவு நீர் வெளியேற்றம் தொடர்பாக ஆய்வு நடத்தும் அதிகாரிகள், இயங்காத ஆலைகள் மற்றும் சிறு ஆலைகளுக்கு மட்டுமே சீல் வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காட்டூர், சந்திரசேகரபுரம், கலரம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆலைகளில் துணிகளுக்கு சாயமேற்றுதல், சலவை செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள சில ஆலைகளில் கழிவு நீர் தொட்டியில் இருந்து, நிலத்திற்குள் 50 அடி நீளத்திற்கு குழாய் பதித்து அருகில் மழைநீர் வடிகாலில் சாயக்கழிவு நீரை கலந்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஆலைகளில் ஆய்வு செய்யாமல் இயங்காத நிலையில் சில சாயப்பட்டறைகளையும், இயற்கை சாய கலவைகளை பயன்படுத்தும் ஒரு சில சிறிய பட்டறைகளை மட்டும் இடித்து விட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  பாதிக்கப்பட்ட ஆலை உரிமையாளரான ராஜா இயங்காத ஆலைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள், அதனை இடிப்பதை குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்கிறார். தவறு செய்யும் பெரிய ஆலைகளை விட்டு விட்டு, கண்துடைப்புக்காக, சிறு வியாபாரிளை குறி வைத்து சில அதிகாரிகள் செயல்படுவதாகவும், விதிமுறைகளை மீறிய பெரிய ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  மூடி கிடக்கும் ஆலைகள் மீது திடீரென நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் குறித்து கேட்டபோது, மாவட்ட சுற்று சூழல் அதிகாரிகளான ராஜா மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் பதில் கூற மறுத்து விட்டனர்.

  Also see...

  Published by:Saroja
  First published: