மருத்துவமனை கிளை திறப்பு விவகாரம்: கைகலப்பில் ஈடுபட்ட எம்.பி, எம்.எல்.ஏ ஆதரவாளர்கள்

மருத்துவமனை கிளை திறப்பு விவகாரம்: கைகலப்பில் ஈடுபட்ட எம்.பி, எம்.எல்.ஏ ஆதரவாளர்கள்
நாமக்கல்
  • News18
  • Last Updated: January 19, 2020, 10:33 PM IST
  • Share this:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கால்நடைமருத்துவமனை கிளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி, எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் எட்டிமடை பகுதியில் கால்நடை மருத்துவனை கிளைக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, திருச்செங்கோடு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி திறந்து வைப்பதற்காக வந்திருந்தார். அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கட்டடத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு, கரட்டுவலவு பகுதியில் மருத்துவமனையை அமைக்கக் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, கரட்டுவலவு பகுதியில் கால்நடை மருத்துவக்கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து சமாதானப்படுத்தினர். பின்னர், எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி கால்நடை மருத்துவமனை கிளை கட்டிடத்தை திறந்து வைத்தார்.


Also see:

First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்