நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : வீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு

Youtube Video

நாமக்கல் அருகே விசைத்தறி தொழில் நலிவடைந்ததால், மனைவியுடன் கூலித்தொழிலாளி வீதியில் குடியேறிய நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக இருவரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

 • Share this:
  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களை நம்பி சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். விசைத்தறி தொழிலின் மூலதனமாக கருதப்படும் நூல் விலை, கடந்த 6 மாதங்களாக உயர்ந்து வருகிறது. இதனால் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

  விசைத்தறி தொழில் முடங்கியுள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். பெரியகாடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கருப்பணன், கடந்த 6 மாதங்களாக வேலையின்றி தவித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் வசித்து வரும் அவர், வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார். வேலை இல்லாததால், குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட கருப்பணனுக்கு, வீட்டு வாடகையும் செலுத்த முடியவில்லை. இதனால் தம்பதியரை, வீட்டின் உரிமையாளர் வெளியேற்றினார்.

  Also Read : கடற்கரைக்கு தடை, கோவிலுக்கு அனுமதி.. தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள்
   ஆதரவுக்கரம் நீட்ட ஆளில்லாமல் தவிக்கும் கருப்பணன், வீதியில் குடியேறியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை அருகே, கழிவுநீர் ஓடையின் சிலாப்பில் தஞ்சம் அடைந்துள்ளார். மூட்டை முடிச்சுகளுடன் வீதியிலேயே இருவரும் வாழ்க்கையை நகர்த்துவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.






  வேலையில்லாததால் வீதியில் தஞ்சம் அடைந்துள்ள கூலித்தொழிலாளி தம்பதியை மீட்க, தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: