• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாமக்கல் மக்களவைத் தொகுதி

நாமக்கல் மக்களவைத் தொகுதி

நாமக்கல்

நாமக்கல்

2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் 79.64% வாக்குகள் பதிவாகின.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோழிப் பண்ணைகளும் முட்டை வியாபாரமும் நிறைந்து காணப்படும் நாமக்கல் மக்களவைத் தொகுதி 2008-ம் ஆண்டு முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.

    மக்களவைத் தொகுதியாக இருந்த ராசிபுரம் தொகுதி மறு சீரமைப்பின் போது நீக்கப்பட்டு நாமக்கல் மக்களவைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது.

    மக்களவைத் தொகுதி அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வின் காந்திச் செல்வன் வெற்றி பெற்றார். 16-வது மக்களவைத் தேர்தலில் தி.மு.க-விடம் இருந்த தொகுதி அ.தி.மு.க வசம் சென்றது.

    அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பி.ஆர். சுந்தரம் 5,63,272 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 15-வது மக்களவைத் தேர்தலில் 3,71,476 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்த காந்திச்செல்வன், 16-வது மக்களவைத் தேர்தலில் 2,68,898 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

    தே.மு.தி.கா-வின் எஸ்.கே. வேல் 1,46,882 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சியின் ஜி.ஆர். சுப்ரமணியம் 19,800 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியைத் தழுவினர். 2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் 79.64% வாக்குகள் பதிவாகின.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: