அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மகளின் சிகிச்சைக்காக நிதி திரட்டும் தந்தை!

சிறுமி மித்ரா

சிறுமி மித்ராவுக்கு உதவ நினைப்பவர்கள் அவருடைய தந்தை சதீஷின் ஜி-பே எண்ணுக்கு பணம் அனுப்பியும் உதவலாம்.

  • Share this:
முதுகெலும்பு தசைநார் சிதைவு [Spinal muscular atrophy (SMA)] எனும் அரிய மற்றும் நூதன நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குமாரபாளையத்தைச் சேர்ந்த சிறுமியின் மருத்துவ செலவிற்காக உதவுமாறு அவருடைய தந்தை வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார், இவருடைய மகள் மித்ரா, மிகவும் அரிய மற்றும் நூதன முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அரிதான மரபணு கோளாறானது சிறுமி மித்ராவினுடைய தசைகளை ஒன்றன் பின் ஒன்று என கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. இதன் காரணமாக சிறுமி மித்ரா மூச்சு விடவும், உணவை விழுங்க முடியாமலும், பிற குழந்தைகள் செய்யக்கூடிய சின்னஞ் சிறு செயல்களையும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.

சிறுமி மித்ரா


சிறுமி மித்ராவின் உயிரை காப்பாற்றுவதற்காக ஸோல்கென்ஸ்மா (Zolgensma) என்ற ஒரு முறை மரபணு மாற்று சிகிச்சை அவருக்கு தேவைப்படுகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள சுமார் 16 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் சதீஷின் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

சிறுமி மித்ராவுக்கான மருத்துவ சிகிச்சைக்காக தங்களால் ஆன அனைத்து வழிகளிலும் முயற்சித்தும் அவருடைய குடும்பத்தினரால் சிகிச்சைக்கான முழு தொகையையும் திரட்ட இயலவில்லை.

எனவே தன்னுடைய மகள் மித்ராவின் சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தை திரட்டுவதற்காக நன்கொடையாளர்களின் உதவியை கோரி அவர் ஆன்லைன் வழியாக முயற்சியை தொடங்கியிருக்கிறார்.

சிறுமி மித்ராவின் சிகிச்சை விவரங்கள்


16 லட்சம் பேர் 100 ரூபாய் அளித்தால் கூட தன்னுடைய மகளின் சிகிச்சைக்கான பணம் கிடைத்துவிடும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

சிறுமி மித்ராவுக்கு உதவ நினைக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் வங்கிப் பரிவர்த்தனை, ஜி பே, பே.டி.எம், நெட் பேங்கிங் போன்ற வழிகளில் சிகிச்சைக்கான சிறிய பங்களிப்பை தந்து உதவலாம்..

சிறுமி மித்ராவின் தந்தை சதீஷின் வங்கிக் கணக்கு விவரம்:

A/C No: 6999413500436165
A/C Name: K Satheesh Kumar-Ketto
A/C Type : Current

IFSC : YESB0CMSNOC         (ஐஎஸ்எஃப்சி கோடில் B என்ற எழுத்துக்கு பின்னர் ஜீரோவும், N என்ற எழுத்துக்கு பிறகு ஆங்கில எழுத்தான O என்பதும் இடம்பெற்றுள்ளன)

(The digit after B is Zero and the letter after N is O for orange)

கீழ்க்கண்ட இணைப்பில் சிறுமி மித்ராவின் மருத்துவ சிகிச்சை விவரங்களும், நன்கொடை அளிப்பதற்கான இணைப்பு பக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சிரமம் என நினைப்பவர்கள் சதீஷின் ஜி-பே மூலமாகவும் மித்ராவின் சிகிச்சைக்காக பணத்தை அனுப்பி உதவலாம்.

https://www.ketto.org/fundraiser/my-baby-battles-for-her-life-and-we-need-your-support-to-save-her-436165?utm_medium=whatsapp_share&utm_content=daec6956bed35f7d85c3bf5b90a4d6ec&shby=1&utm_source=internal&utm_campaign=my-baby-battles-for-her-life-and-we-need-your-support-to-save-her-436165&payment=form

சிறுமி மித்ராவுக்கு உதவ நினைப்பவர்கள் அவருடைய தந்தை சதீஷின் ஜி-பே எண்ணுக்கு பணம் அனுப்பியும் உதவலாம்.

சதீஷின் ஜி-பே எண்: 9500623402

உதவ நினைப்பவர்கள் சிறிய தொகை என்றாலும் தயங்காமல் உதவலாம் அதே போல பண உதவி அளிக்க இயலாதவர்கள் உங்களின் நண்பர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்து உயிருக்கு போராடும் சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்ட உதவலாம்.
Published by:Arun
First published: