மழை காரணமாக முட்டையின் கொள்முதல் விலை குறைந்தது..

கோப்புப்படம்

முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைத்து 4  ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

 • Share this:
  நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைத்து 4  ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

  கடந்த வாரம்  முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 23-ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை ஒரே நாளில் 25 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.  இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் புயல் மற்றும் மழை காரணமாக முட்டைகள் அனுப்புவது தடைபட்டுள்ளதால் அதிகளவில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் இன்று விலை மேலும் 25 காசுகள் குறைக்கப்பட்டு பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
  Published by:Rizwan
  First published: