ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

போதிய குடிநீர் வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் : நாமக்கல் ஆட்சியரிடம் காலி குடங்களுடன் சென்று கோரிக்கை மனு

போதிய குடிநீர் வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் : நாமக்கல் ஆட்சியரிடம் காலி குடங்களுடன் சென்று கோரிக்கை மனு

காலி குடங்களுடன் சென்று கோரிக்கை மனு

காலி குடங்களுடன் சென்று கோரிக்கை மனு

Namakkal District : நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் பகுதி ஊர் மக்கள், குடிநீர் வசதி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இப்பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், மழைக்காலங்களில் குடிநீர் பிடிக்கும் குழாய்களில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அதனை சரிசெய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஊர் மக்கள் காலிக்குடங்களுடன் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், குடிநீர் குழாயில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாவதாகவும், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2 அடி ஆழத்தில் குடி நீர் குழாய்கள் இருப்பதால் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் சிரமப்படுவதாகவும்,  தண்ணீர் பிடிக்க காலதாமதம் ஆவதால் உரிய நேரத்திற்க வேலைக்குச் செல்ல முடியாததால் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : ஜெர்மன் நாட்டு பெண்ணை இந்து முறைப்படி மணந்த இளம் தொழிலதிபர்.. ஆரணியில் அமோகமாக நடந்த திருமணம்

இதனால், காலதாமதம் செய்யாமல் குடிநீர் பிடிக்கும் இடத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் - ரவிக்குமார்,  நாமக்கல்

First published:

Tags: Drinking water, Namakkal