முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரூ.5000 லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

ரூ.5000 லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நில சீர்திருத்தத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு அதிகாரி அதனை வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.

  • Last Updated :

 திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன் நில சீர்திருத்தத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு அதனை வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பிர்கா வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன். எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர்  தன்னிடம் உள்ள நிலத்தை சீர்திருத்தம் செய்வதற்கு வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் அனுமதி கேட்டார். சுமார் ஒரு மாதமாக அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரன் தனக்கு ரூ5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் அப்போது தான் அனுமதி கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக நில உரிமையாளர்  நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். புகாரை தொடர்ந்து  லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்துடன் வந்த நில உரிமையாளர் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வைத்து ரசாயனம் தடவிய பணத்தை  பரமேஸ்வரனிடம் கொடுத்த போது டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் வந்து  மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்  பரமேஸ்வரனை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்து ரூபாய் 5 ஆயிரம்  கைப்பற்றப்பட்டது. லஞ்சம் வாங்கிய பரமேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார் என லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

First published:

Tags: Bribe, Crime News, Vigilance officers