நாமக்கல்லில் அதிமுக ஆட்சியில் அரசு கட்டடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த பிஎஸ்டி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவரது ஆதரவாளர் நாமக்கல் நல்லி பாளையத்தை சேர்ந்த பிஎஸ்டி தென்னரசுவின் வீடு மற்றும் அலுவலகத்தில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் பத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடம், சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த கட்டுமானங்களை பிஎஸ்டி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - ரவிச்சந்திரன் (நாமக்கல்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.