வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை பணி தீவிரம்!

வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை பணி தீவிரம்!

வேட்பாளர்களின் முகவர்கள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 • Share this:
  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் மே 2-ஆம் தேதி திருச்செங்கோடு எளையாம் பாளையம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்க உள்ளது. இதில் பிரதான கட்சிகளான திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம். அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 28 பேர் போட்டியிட்டு உள்ளனர்.

  இவர்கள் தங்களது வாக்கு எண்ணிக்கை முகவர்களாக நியமித்துள்ளவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், ஊடக செய்தியாளர்கள், வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், என அனைவரும் பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற்றிருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  இதையடுத்து, அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா பரிசோதனை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு RTPCR என்னும் கொரோனா பரிசோதனை திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, அதிமுக வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆகியோர் பரிசோதனை எடுத்துக் கொண்டனர்.

  தடுப்பூசி இரண்டு முறை போட்டுக் கொண்டவர்கள், இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதில்லை எனவும் ஊசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஊசி போட்டுக் கொண்டவர்கள் கூட சிலர் இன்று பரிசோதனை செய்து கொண்டனர். இன்று மட்டும் சுமார் 279 பேருக்கு கொரோனா பரிசோதனை நடக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர் - ரவிசந்திரன் ராஜகோபால்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: