திருச்செங்கோடு புதிய பேருந்துநிலைய பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ 200 அபராதம் விதித்து டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் போலீசார் அதிரடி நடவடிக்கை.
நாடு முழுவதும் கொரோனா 3வது அலையாக ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு தற்காப்பு நடவடிக் கைகளை துரிதப்படுத்தி உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. முகவசம் அணிவதும் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் தான் பாதுகாப்பு எனவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முககவசம் அணியாமல் வருவபவர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவல் அதிகமாகும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
அதன்படி இன்று புதிய பஸ்நிலையம் மற்றும் ரவுண்டானா பகுதிகளில் திருச்செங்கோடு போலீஸ் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார், எலச்சி பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் குலசேகரன் ஆகியோர் உள்ளிட்டபோலீசார் முகக் கவசம் குறித்த வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
பள்ளி கல்வி நிறுவன வாகனங்கள் பயணிகள் பேருந்துகள் ஆகியவற்றில் சோதனை செய்தனர். முககவசம் அணியாமல் இருந்த மாணவ மாணவிகளுக்கும் பயணிகளுக்கும் டிஎஸ்பி சீனிவாசன் முககவசங்களை வழங்கி அறிவுரை வழங்கினார் இனியும் இவ்வாறு முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். இதேபோல் பேருந்து நடத்துநர் ஓட்டுநர்களுக்கும் முககவசம் இல்லாமல் பயணிகள் பஸ்சில் பயணிக்க அனுமதிக் கூடாது என அறிவுரைகள் வழங்கினார்.
Also Read: கொரோனா காலத்தில் யோகா உதவியாக இருக்கும் - தமிழிசை செளந்தரராஜன்
தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் முக கவசம் அணிய வேண்டும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாகவும் தொடர்ந்து இதுபோல் தினசரி ஆய்வு நடக்கும் எனவும் அபராதம் விதிக்கப் படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
செய்தியாளர்: ஆர்.கே. மாதேஸ்வரன் ( திருச்செங்கோடு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.