• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாதிய வன்கொடுமைகளை கண்டித்து நாமக்கல்லில் தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

சாதிய வன்கொடுமைகளை கண்டித்து நாமக்கல்லில் தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் புலிகள் கட்சி போராட்டம்

தமிழ் புலிகள் கட்சி போராட்டம்

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யக் கோரி கண்டன கோஷங்களை முழங்கினர்.

  • Share this:
    சாதிய வன்கொடுமைகள் மற்றும் படுகொலைகளை கண்டித்து, நாமக்கல்லில் தமிழ் புலிகள் கட்சி சார்பில், அக் கட்சி நிறுவனத் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தமிழன் முன்னிலையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    அவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் தொடர் சாதிய வன்கொடுமை அதற்குத் துணைபோகும் அரசு அதிகாரிகள் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் செய்யக் கோரியும் கண்டன கோஷங்களை முழங்கினர்.

    Must Read : புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    கட்சிக் கொடியை ஏந்தியபடி, தொண்டர்கள் அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டு, ஆர்ப்பர்ட்டம் செய்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள தமிழ் புலிகள் கட்சியின் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.

    செய்தியாளர் - ரவிச்சந்திரன், நாமக்கல்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: