பால் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும், குழந்தைகள் சத்துணவில் பால், பால் பவுடர் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் நாமக்கல் மாவட்டத்தின் சார்பில், பரமத்தி சாலையில் உள்ள நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர், தமிழக அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு பால் கொள்முதல் விலையை அறிவித்தது கடந்த 3 ஆண்டுகளாக பருத்திக்கொட்டை புண்ணாக்கு தவிடு உள்ளிட்ட பொருட்களின் விலை 50 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் பசும்பால் ஒரு லிட்டருக்கு 42 ரூபாய், எருமைப் பால் ஒரு லிட்டர் 51 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.
Must Read : விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
தமிழக அரசு பால் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்துள்ளது இதனால் தினசரி ஒரு கோடி ரூபாய் வருடத்திற்கு 300 கோடி ரூபாய் ஆவின் நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று பல ஒன்றியங்கள் நஷ்டத்தில் இயங்க கூடிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்த இழப்புத் தொகையை ஆவின் நிறுவனத்திற்கு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனுசாமி தெரிவித்தார்.
செய்தியாளர் : ரவிச்சந்திரன், நாமக்கல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cow Milk, Milk, Namakkal, Nutrition food