ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காதல் திருமணம் செய்த ஜோடியை தாக்கி பெண்ணை தூக்கி சென்ற உறவினர்கள்.. ராசிபுரத்தில் பரபரப்பு

காதல் திருமணம் செய்த ஜோடியை தாக்கி பெண்ணை தூக்கி சென்ற உறவினர்கள்.. ராசிபுரத்தில் பரபரப்பு

ராசிபுரம்

ராசிபுரம்

பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரின் அலைக்கழிப்பே  காதலர்களின் தாக்குதல் சம்பவத்திற்க்கு காரணம் என குற்றசாட்டு எழுத்துள்ளது ..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இராசிபுரம் காதல் திருமணம் செய்த பெண்ணின் உறவினர்கள் காதலர்கள் வந்த காரை மறித்து கண்மூடித்தனமாக தாக்கி பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த களரம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகள் சுஜிதா இவர் அதே பகுதியில் வசிக்கும் மின்சார துறை ஒப்பந்த ஊழியரான அஜித் என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. காதலர்கள் இருவரும் ஒரே பிரிவை சேர்ந்த நிலையில்  வீட்டை விட்டு மார்ச் 16-ம் தேதி இரவு வெளியேறி 17-ம் தேதி நாமக்கல் ஈஸ்வரன் கோவிலில்  திருமணம் செய்து கொண்டு நாமக்கல்  எஸ்.பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

Also Read: கல்லூரி  வகுப்பறையில்  மயங்கி விழுந்த மாணவி  மரணம்.. சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இருவரும் மேஜர் என்பதால் காவல்துறை அதிகாரிகள் காதலர்களின் பெற்றோரை அழைத்து சமரசம் பேசியபோது காதலன் அஜீத்துடன்  செல்வதாக சுஜிதா உறுதியாக கூறியுள்ளார் . இதனிடையே ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து  காதலர்கள் பேளுகுறிச்சி காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு செல்ல திட்டமிட்டு காரில் சென்றபோது  அப்பநாய்கன்பட்டி அருகே மறைந்திருந்த பெண்ணின் உறவினர்கள் காரை மறித்து சரமாரியாக கற்களால் தாக்கி சுஜிதா-வை தூக்கி சென்றனர்.

Also Read: குளியலறையில் பெண் கொடூர கொலை.. தப்பி ஓடிய வளர்ப்பு மகனை தேடும் போலீஸ்

பெண் உறவினர்களால் தாக்கப்பட்ட  போடிநாய்க்கன்பட்டி பஞ்சாயத்து தலைவரின் கணவர்  ரவி ,பரமேஸ்வரி, காதலன் அஜீத் உட்பட 3 பேர் பலத்த காயத்துடன் இராசிபுரம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் போலீசார் பெண்ணை கடத்திச் சென்றவர் உறவினர்களை வலைவீசி தேடி வரும் நிலையில் 2 பேரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரின் அலைக்கழிப்பே  காதலர்களின் தாக்குதல் சம்பவத்திற்க்கு காரணம் என குற்றசாட்டு எழுத்துள்ளது.

செய்தியாளர்: சுரேஷ் (நாமக்கல்)

First published:

Tags: Crime News, Kidnap, Kidnapping Case, Love, Love marriage, Namakkal, Police, Rasipuram