Home /News /tamil-nadu /

வெளிநாட்டு வேலையை துறந்துவிட்டு, நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் ராசிபுரம் இளைஞர்

வெளிநாட்டு வேலையை துறந்துவிட்டு, நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் ராசிபுரம் இளைஞர்

நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் ராசிபுரம் இளைஞர்

நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் ராசிபுரம் இளைஞர்

Namakkal District | கோழிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளை தனது கடையில் விற்பனைக்கு வைப்பதும், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆரோக்கியமான இறைச்சி, முட்டைகளை கொடுக்க வேண்டும் என்றவர், அடுத்ததாக ஆடு, நாய் வளர்ப்பில் ஈடுபடப்போவதாக நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    குவைத்தில் உள்ள ஆயில் கம்பெனியில் டெக்னீசியன் வேலை செய்த பிரவீன்குமார் கொரோனாவால் வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல மனமில்லாமல் சொந்த ஊரிலேயே நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு அசத்திவருகின்றார்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர வங்கித் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 30. டிப்ளமோ இசிஇ., (ECE) முடித்துள்ளார். இவரின் தந்தை இதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். கல்லூரி முடிந்த பிறகு மளிகை கடையில் அவ்வப்போது வேலை பார்த்து வந்துள்ளார் பிரவீன்குமார். அதே சமயத்தில் பொழுதுபோக்காக வீட்டில் முயல், லவ் போர்ட்ஸ், அலங்கார மீன் வளர்ந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில், படிப்பு முடிந்ததும் குவைத்தில் உள்ள ஆயில் கம்பெனி ஒன்றில் டெக்னீசியன் வேலையில் கடந்த 2016ல் சேர்ந்தார். உலக அளவில் பலரின் வாழ்வை  புரட்டிப்போட்ட கொரோனா இவரின் வாழ்விலும் விளையாடியது. கொரோனா முதல் அலையின் போது தான் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி ராசிபுரம் வந்தவர் சிறிது காலம் மளிகை கடையில் வேலை பார்த்துள்ளார். பின்னர் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்று பணி செய்யாமல் சொந்த ஊரில் வாழ்வதே சொர்கம் என்பதை உணர்ந்து இங்கேயே இருப்பதென முடிவு செய்துள்ளார்.

    அப்போது தான், சொந்தமாக நாட்டுக்கோழி வளர்க்கலாம் என பிரவீன்குமாருக்கு ஐடியா தோன்றியுள்ளது. ராசிபுரம் நகரப்பகுதியில் இவர்கள் வசிக்கின்றனர். கிராமப்புறங்கள் போல் இடவசதியும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாத நிலையில், இவரின் தந்தை மளிகை கடை அருகே சொந்த வீடு உள்ளது. அதில், ஒரு குடும்பம் மாதம், 3,000 ரூபாய்க்கு வாடகையில் இருந்தனர்.



    உடனடியாக தந்தையிடம் பேசி அவர்களை காலி பண்ண சொல்லியுள்ளார் பிரவீன்குமார். அவர்கள் காலி செய்தவுடன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து 1 நாள் குஞ்சாக மொத்தம் 62 பெருவிடை குஞ்சுகளை வாங்கி வந்து வீட்டில் விட்டுள்ளார். தற்போது ஒவ்வொரு கோழிகளும் அரை கிலோ அளவிற்கு வளர்ந்துள்ளன. கோழிகளுக்கு தீவனமாக மக்காச்சோளம், கோதுமை, கருவாடு, சின்ன வெங்காயம், முருங்கை இலை ஆகியவற்றை கொடுக்கிறார். இதற்கு மாதம் 1,200 ரூபாய் வரை செலவு செய்கிறார்.



    கோழிகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளை தனது கடையில் விற்பனைக்கு வைப்பதும், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆரோக்கியமான இறைச்சி, முட்டைகளை கொடுக்க வேண்டும் என்றவர், அடுத்ததாக ஆடு, நாய் வளர்ப்பில் ஈடுபடப்போவதாக நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

    செய்தியாளர் : சுரேஷ்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி