பெங்களூரில் உள்ள நித்யானந்தா மடத்தில் கடந்த 5 வருடமாக இருந்த பெண்ணை வங்கியில் கடன் பத்திரத்தில் கையெழுத்துப் போட அழைத்து வந்தபோது ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு அந்தப் பெண்ணை மீட்டு குடும்பத்திடம் ஒப்படைத்ததோடு காரில் அழைத்து வந்த நித்யானந்தா பெண் சீடர்களை அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது62). இவர் இதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரின் மனைவி அத்தாயி, 52. நித்தியின் சீடராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆசிரமத்தில் இருந்து வருகிறார். தற்போது வசித்து வரும் ராமசாமியின் வீடு மற்றும் கடை அத்தாயின் பெயரில் தான் உள்ளது. இதன் மீது ரூ.6.40 லட்சத்திற்கு வங்கி மற்றும் பைனான்சில் இருந்து கடன் வங்கியுள்ளனர்.
அத்தாயி நித்யானந்தாவின் மீதும் கொண்ட அளவு கடந்த பக்தியின் காரணமாக கணவருக்கு தெரியாமல் ரூ.6.40 லட்சம் பணத்துடன் கடந்த 2017ல் பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றுவிட்டார். அதன்பின் அத்தாயி வீடு திரும்பவஏ இல்லை. பலமுறை நேரிலும், போனிலும் பேசியும் அவர் ஆசிரமத்தை விட்டு வர மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், வங்கியில் வாங்கிய கடனுக்கான வாய்தா முடிந்த நிலையில் வீடு ஜப்திக்கு வந்துள்ளது. ராமசாமி பல்வேறு இடங்களில் கடனுக்கான பணத்தை தயார் செய்து விட்டார். ஆனால், அத்தாயின் கையெழுத்து அவசியம் என்பதால் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு பல முறை பேசிய பிறகே இன்று அத்தாயியை அழைத்து வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வடுகத்தில் உள்ள வங்கிக்கு இன்று கர்நாடகா பதிவெண் கொண்ட காரில் அத்தாயியை நித்தியின் சீடர்கள் 3 பேர் (இரண்டு பெண்கள், 1 ஆண்) அழைத்து வந்தனர். ஆனால், வடுகத்திற்கு செல்லும் முன்பே ராமசாமியின் வீடு உள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் பொதுமக்கள் உதவியுடன் காரை மடக்கினர். காரில் இருந்த அத்தாயியை பொதுமக்கள் உதவியுடன் ராமசாமி மற்றும் அவரின் மகன் பழனிசாமி என்கிற சிவா வேறு காரில் அழைத்துச் சென்றனர்.இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து காரில் வந்த நித்தியின் சீடர்களை பொதுமக்கள் விரட்ட உயிர் பயத்தில் அங்கிருந்து கிளம்பினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பட்டணம், வடுகம், புதுப்பட்டி என பல பகுதியில் இருந்து பெண்கள் பலரும் நித்தியின் ஆசிரமத்தில் உள்ளனர். அவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குழந்தையால் மனம் மாறிய அத்தாயி.
அத்தாயிக்கு பழனிசாமி என்கிற சிவா, 28 என்ற மகன் உள்ளார். இவருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சிவா தனது அம்மாவுடன் அடிக்கடி வீடியோ பேசியுள்ளார். அப்போது பேரக்குழந்தையையும் அத்தாயி பார்த்துள்ளார். இதனால் அவர் மனம் மாறியுள்ளார். இதனால் அடிக்கடி தான் வீட்டிற்கு வந்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனால், அவரால் வர முடியவில்லை.
Also Read: தமிழகத்தில் இலவசமாக 'மொட்டை' மட்டும்தான் அடிக்கப்படுகிறது: ஜெயக்குமார் விமர்சனம்
ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் ஆசிரமம் ஒன்று கடந்த சில வருடங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனை நித்தியானந்தா திறந்து வைத்தார். இதனால், இந்த பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் நித்தியின் பரம சீடர்கள் ஆகினர். நடிகை ரஞ்சிதா வீடியோ வெளியான பின்னர் இந்த ஆசிரமத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால், ஆசிரமம் மூடப்பட்டது. குறிப்பாக, பட்டணம் முனியப்பன் பகுதியில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட பெண்கள் நித்தியின் சீடர்களாக மாறினர். இதற்கு முக்கிய காரணமே இந்த அத்தாயிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவரது கணவர் ராமசாமி கூறுகையில், எனது மனைவி 5 ஆண்டுகளாக நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ளார். அவரை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ராசிபுரம் டிஎஸ்பி நாமகிரிப்பேட்டை காவல் நிலையம் என அனைத்து இடங்களிலும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனது மனைவியின் பெயரில் சொத்து உள்ளது. அதன் மீது பைனான்ஸ், வங்கியில் கடன் ரூ. 6.40 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். அதனை முழுவதும் தியான வகுப்புக்கு எடுத்துச் சென்றுவிட்டார். எனது மகனிடம் ஆசிரமத்திலிருந்து மனைவி பேசினார். நான் வருவதற்கு பலமுறை கேட்டுப் பார்த்தும் என்னை விட மறுக்கிறார்கள் என்றார்.
தற்போது எங்கள் வீடு ஜப்திக்கு வந்ததால் இதுகுறித்து அவரிடம் தெரியப்படுத்திய பின்னர் அவர் வருவதாக தெரிவித்தார். இன்று எங்கள் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து என் மனைவியை அவர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளனர். எனது மகன் இரண்டு நாட்கள் முன்பு போனில் பேசும்போது, கொலையை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளனர்.
சொத்தை பறிக்கவே இவர்கள் குருப்பாக வருகிறார்கள். இதுகுறித்து தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக தெரிவிக்கிறேன் என்றார். ராமசாமியின் மகன் பழனிசாமியும் கடந்த இரண்டு ஆண்டாக நித்தியின் ஆசிரமத்தில் இருந்து, பின்னர் மீட்க்கப்பட்டார் என்பது குறிப்பித்தக்கது.
செய்தியாளர்: சுரேஷ் (நாமக்கல்)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cyber crime, News On Instagram, Nithyananda, Nithyanandha, Rasipuram