ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராசிபுரம் காய்கறி மார்க்கெட் கூரை இடிந்து விழுந்தது... 3 பேர் காயம்

ராசிபுரம் காய்கறி மார்க்கெட் கூரை இடிந்து விழுந்தது... 3 பேர் காயம்

காய்கறி மார்க்கெட் கூரை இடிந்து விழுந்தது

காய்கறி மார்க்கெட் கூரை இடிந்து விழுந்தது

Rasipuram : நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, தினசரி மார்க்கெட் கூடுதல் கூரை முழுவதும் இடிந்து விழுந்ததில் வியாபாரிகள் 3 பேர் காயம் அடைந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 120க்கும் மேற்பட்டவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகின்றனர். அதற்கான சுங்கவரிக் கட்டணத்தை, நகராட்சியிடம் செலுத்தி வருகின்றனர். வியாபாரிகளுக்காக, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

  அதிகாலை 4 மணிக்கு கடைகளுக்கு வியாபாரிகள் வந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.  இரவு 10 மணி அளவில்தான் வீடு திரும்புகின்றனர். தினசரி மார்க்கெட் என்பதால் காலை வேளையில் எப்போதும் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ராசிபுரம் பகுதியில் மழை பெய்தது.

  காய்கறி மார்க்கெட் கூரை இடிந்து விழுந்தது

  இந்த மழையின் காரணமாக தினசரி மார்க்கெட்டின் மேற்கூரை முற்றிலுமாக பெயர்ந்து விழுந்தது. மின்கம்பங்களும் சாய்ந்தன.

  இதில், 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. நள்ளிரவில் விழுந்ததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. பின்னர் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு கூரையை அகற்றும் பணி நடந்து வருகிறது.

  இடிந்து விழுந்த மார்க்கெட் கூரை

  Must Read : புதுக்கோட்டை அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்... ஆராவாரத்துடன் ரசித்த பொதுமக்கள்!

  இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தினசரி மார்க்கெட்டில் மேல்கூரை அமைக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்கள் ஏற்கனவே துரு பிடித்தவாறு பாழடைந்த நிலையில் காணப்பட்டன. இது குறித்து நகராட்சியிடம் பலமுறை எடுத்துக் கூறியும் கூட, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது என்றனர்.

  செய்தியாளர் : சுரேஷ், ராசிபுரம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Namakkal, Rasipuram