Home /News /tamil-nadu /

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனை வந்த விவசாயி; டாக்டர்கள், நோயாளிகள் அதிர்ச்சி

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனை வந்த விவசாயி; டாக்டர்கள், நோயாளிகள் அதிர்ச்சி

கடித்த பாம்புடன் மருத்துவமனை வந்த விவசாயி

கடித்த பாம்புடன் மருத்துவமனை வந்த விவசாயி

தன்னைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து எடுத்துக் கொண்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.

  • Last Updated :
Namakkal News | தன்னை கடித்த பாம்பை உயிருடன் பிடித்து எடுத்துக்கொண்டு, ராசிபுரம் அரசு மருத்துவம னைக்கு சிகிச்சை பெற வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜா. இவர் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை சுமார் 4 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா. மருத்துவமனை சென்றால் பாம்பின் பெயர் பெயரைக் கேட்பார்கள் என்பதை உணர்ந்து அச்சம் ஏதும் இல்லாமல் தன்னைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து எடுத்துக் கொண்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.



இதனை பார்த்த டாக்டர்கள், செவிலியர்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற காத்திருந்த நோயாளிகள்  உயிருள்ள பாம்புடன் வந்தவரை அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ராஜாவை அழைத்துச் சென்று அவரை கடித்த பாம்பை பார்த்து, அதன் விஷ தன்மைக்கு ஏற்ப உடனடியாக சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவத்தால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பான சூழலால் ஏற்பட்டது.

Also Read : சைக்கிளில் பயணம் செய்து ஊரடங்கை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு
Published by:Vijay R
First published:

Tags: Namakkal

அடுத்த செய்தி