வடிவேலு பாணியில் டாஸ்மாக்கில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் - விசாரிக்கும் காவல்துறை

டாஸ்மாக் திருட்டு

இரும்பு கம்பிகள் வைத்து பூட்டை உடைத்து 3 பெட்டிகள் பீர் பாட்டில் எடுத்து அமர்த்து குடித்துள்ளனர்.

  • Share this:
    ராசிபுரம் அருகே டாஸ்மாஸ்க் பூட்டை உடைத்து ஜாலியாக மது அருந்திய கொள்ளையர்கள் மது போதையில் அருகேயுள்ள மளிகை கடையில்  கைவரிசை;

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை (5958) உள்ளது.இங்கு, விடியற்காலை 4:00 மணி அளவில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து மது பெட்டிகளை திருடி சென்றனர்.மேலும், பத்துக்கும் மேற்பட்ட மதுபான பெட்டிகளை சாலையில் போட்டு உடைத்து சென்றுள்ளனர்.

    தொடர்ந்து முத்துக்காளிபட்டி பகுதியில் சேலம் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் மூன்று மளிகை கடைகளில் பூட்டை உடைத்து 10 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ₹3,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    Also Read: ‘நான் அட்வகேட்.. மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன்’ - சென்னையில் போக்குவரத்து காவலரை மிரட்டிய பெண்

    இந்த நிலையில், டாஸ்மாக் கொள்ளை நடந்த இடத்தில் ராசிபுரம்  DSP முத்துசாமி (பொறுப்பு), நாமக்கல்  ADSP ராமு , வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் கோமதி, துணை ஆய்வாளர் மாணிக்கம், டாஸ்மாக் நாமக்கல் மண்டல தாசில்தார் சாகுல் அமீது,  பேளுகுறிச்சி ஆய்வாளர் வேலு தேவன், அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் இந்திரா ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து போலீசார்  நடத்திய விசாரணையில், “9 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் டாஸ்மாக் உள்ளே இருந்த நிலையில் CCTV கேமராவை கொள்ளையர்கள் மேலே நோக்கி திருப்பி உள்ளனர். பின்பு  இரும்பு கம்பிகள் வைத்து பூட்டை உடைத்து 3 பெட்டிகள் பீர் பாட்டில் எடுத்து அமர்த்து குடித்துள்ளனர். பிறகு 10 விலையுயர்ந்த மது பெட்டிகளை கையிலேயே தூக்கி சென்றுள்ளனர்.
    ஆனால், மது போதை அதிகமானதால் பெட்டிகளை தூக்கி செல்ல முடியாத நிலையில் 5 பெட்டிகளை டாஸ்மாக் கடை அருகே வீசிச் சென்றுள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.அதேபோல், முத்துகாளிப்பட்டி கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப்பில் உள்ள 3 மளிகை கடையில் கொள்ளை அடிக்கும் முன்பு அந்த பகுதியில் உள்ள தெருவிளக்கு மின்சாரத்தை துண்டித்து விட்டு கொள்ளை அடித்துள்ளதும் தெரிய வருகிறது. இரண்டு சம்பவமும் ஒரே நேரத்தில் நடந்திருப்பதால் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

    இதுவரை மதிப்பீடு பார்த்ததில் 50,000 மதிப்பில் தான் மதுபாட்டில்கள் கொள்ளை போனதாக தெரியவந்துள்ளது.
    மேலும், நேற்று வரை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர்கள் இன்று இல்லை என்பதும், ராசிபுரம் பகுதியில் நேற்று மழை பெய்ததால் டாஸ்மாக் கடைக்கு ஊழியர்கள் வராமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

    5958 கடை எண் கொண்ட இந்த டாஸ்மாக்கில் 1 மேற்பார்வையாளரும், 3 விற்பனையாளர்களும் பணியில் உள்ள நிலையில்  முழு விசாரணைக்கு பின்பு தான் மதுபாட்டில் கொள்ளை மதிப்பு தெரிவரும் என நாமக்கல் டாஸ்மாக் துணை மேலாளர் சாகுல் அமீது தெரிவித்தார்.

    முத்துக்காளிப்பட்டியில் CCTV கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் அதனை போலீசார் அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

    தற்போது இந்த CCTV கேமிராக்கள் இருந்தால் கொள்ளையர்களை எளிதில் கண்டுபிடித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால்,
    கொள்ளையர்களை பிடிக்க போலீசார் கோட்டை விட்டதாக பொதுமக்களிடையே கருத்து நிலவுகிறது.இந்த சம்பவத்தால் CCTV கேமிரா மீண்டும் பொருத்த வேண்டும் எனவும் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    நாமக்கல் செய்தியாளர்: சுரேஷ்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: