Home /News /tamil-nadu /

அறிவியல் பாடம் நடத்தும்போது ஆபாசப்படம் - மாணவிகளின் புகாரையடுத்து அரசுப்பள்ளி ஆசிரியரிடம் விசாரணை

அறிவியல் பாடம் நடத்தும்போது ஆபாசப்படம் - மாணவிகளின் புகாரையடுத்து அரசுப்பள்ளி ஆசிரியரிடம் விசாரணை

பள்ளி விவகாரம்

பள்ளி விவகாரம்

அரசுப்பள்ளி ஆசிரியர் புரோஜெக்டரில் பாடம் நடத்தும்போது ஆபாசபடம் வந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
     ராசிபுரம் அருகே அரசுப்பள்ளியில் புரஜெக்டர் உதவியுடன் நடத்தப்பட்ட அறிவியல் பாடத்தின்போது ஆபாச படம் வெளியானது தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வடுகம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 310 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகவும், இயற்பியல் ஆசிரியராகவும் 10 ஆண்டுகளாக எடின்பரோ கோமான் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    Also Read:  தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..

    இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை, 11ம் வகுப்பு மாணவர்கள் 21 பேருக்கு தமிழருவி இணையதளத்தில் இருந்து புரஜெக்டர் உதவியுடன் எடின்பரோ கோமான் பாடம் நடத்தினார். அப்போது ஆபாச புகைப்படம் ஒன்று வந்துள்ளது. இதுகுறித்து இரண்டு மாணவிகள் பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் நாமகிரிப்பேட்டை போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் நாமகரிப்பேட்டை போலீசார் ஆகியோர் வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். பாடம் நடத்திய ஆசிரியர் எடின்பரோ கோமானிடமும் விசாரணை நடைபெற்றது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Namakkal, Tamilnadu

    அடுத்த செய்தி