நாமக்கல் அருகே அஞ்சலக சேமிப்பு, டெபாசிட் கணக்கில் சுமார் ரூ.20 லட்சம் மோசடி: அஞ்சலக அலுவலர் தலைமறைவு!

தபால் நிலையம்

ஒரு சிலர் தங்களின் கணக்கு காலக்கெடு முடிந்த நிலையில், பணத்தை திரும்ப பெற கிளை அஞ்சலகத்தை நாடியுள்ளனர். அப்போது அவர்கள் கணக்கில் பணம் ஏதும் இல்லாமல் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • Share this:
    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள மேல்சாத்தம்பூர் கிளை அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு, டெபாசிட் கணக்கில் சுமார் 20 லட்சம் மோசடி செய்த கிளை அஞ்சலக அலுவலர் தலைமறைவாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள மேல்சாத்தம்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் புதூரில், நடந்தை அஞ்சலகத்தின் கிளை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிளை அஞ்சலகத்தில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், கூலி தொழிலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் சேமிப்புக் கணக்கு, மாதாந்திர சேமிப்பு கணக்கு, வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட கணக்குகளை தொடங்கி வரவு செலவு செய்து வருகின்றனர்.

    இந்த கிளை அஞ்சலகத்தில் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் இருந்து வருகிறார். இந்நிலையில் மாதாந்திர சேமிப்பு கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குக்கு பணம் செலுத்துபவர்களுக்கான கணக்குப் புத்தகங்களை அலுவரே வைத்துக்கொண்டு பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் ஒரு சிலர் தங்களின் கணக்கு காலக்கெடு முடிந்த நிலையில், பணத்தை திரும்ப பெற கிளை அஞ்சலகத்தை நாடியுள்ளனர். அப்போது அவர்கள் கணக்கில் பணம் ஏதும் இல்லாமல் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அப்பகுதியில் கிளை அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காட்டு தீ போல் தகவல் பரவியது.

    இதனையடுத்து அந்த கிளை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்து வரவு செலவு செய்தவர்கள் மாதாந்திர சேமிப்பு மற்றும் இட்டு வைப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தபால் அலுவலகம் முன்பு கூடி தங்களது பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து கிளை அஞ்சலக அலுவலர் தங்கவேல் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

    இதுகுறித்து தகவலறிந்த நடந்தை அஞ்சலக அலுவலர்கள் மாரியம்மன் கோவில்புதூர் கிளை அலுவலகத்திற்கு வந்து அங்கு கூடி இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகையை மீட்டுத்தர வேண்டும் என மேல் சாத்தம்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் இது குறித்து நல்லூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் - ரவிச்சந்திரன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: