ராசிபுரம் பட்டணம் சாலையில் 3 மதுக்கடைகள் அருகருகே அமைந்துள்ளன. அங்கு சந்துக்கடை நடத்துவதில், அண்ணாநகரைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், விஜயலட்சுமி தியேட்டர் பின்புறம் உள்ள ஒரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. காரணம் இப்பகுதியிலேயே வெகு ஜோராக சந்துகடை நடப்பதுதான் வழக்கம். பார் நடத்துவதை விட சந்துகடை நடத்துவதிலேயே அதிக லாபம் கிடைப்பதால் சந்துகடை நடத்துவதில் இரு பிரிவிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது வந்துள்ளது.
இந்நிலையில் பார் நடத்தி வரும் மாயாண்டி என்பவரின் உறவினர் சந்தோஷ் என்பவரை முன்விரோதம் காரணமாக நேற்றிரவு ஒரு கும்பல் தாக்கியது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு தெருவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மயங்கி கிடந்த சந்தோஷை ராசிபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு ஆத்திரத்தில் அந்த பகுதியில் கிடைத்தவர்களை எல்லாம் அடிக்க ஆரம்பித்தனர். இதனால் சம்பவ இடத்தில் இராசிபுரம் போலீசார் குவிக்கப்பட்டு சமரசம் பேசினர். ஆனால் சந்தோஷ் உறவினர்கள் 100 பேர் போலீசை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதற்கிடையில் இராசிபுரம் அரசு மருத்துவமனையில் கும்பலால் தாக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள சந்தோஷ் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் சேலம் அரசு மருத்துமனைக்கு 108 ஆம்புலென்ஸ் மூலம் எடுத்து செல்ல மருத்துவர் பரிந்துரை செய்தனர்.
இதனால் மேலும் கொதிப்படைந்தவர்கள் சந்தோஷ்-ஐ தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து போலீசாரை முற்றுகையிட்டு போராடினர். அதனைத் தொடர்ந்து இராசிபுரம் பழைய பஸ் நிலையம் டவுண்டானில் குவிந்த கும்பலால் சம்பவ இடத்திற்க்கு வந்த இராசிபுரம் ஆய்வாளர் செல்வராஜ் உடனடியாக சம்மந்தபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கைது செய்கிறேன் என உறுதியளித்து சமரசம் பேசினார்.
மேலும் படிக்க...Koovagam festival Photos | கூத்தாண்டவர் கோவிலில் வழிபட்ட திருநங்கைகள்...
ஆனாலும் அந்த கும்பல் ஆங்காங்கே நின்றதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் இராசிபுரத்தில் பதற்றமான சூழலே நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: சுரேஷ், ராசிபுரம்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime | குற்றச் செய்திகள், Namakkal, Police, Rasipuram