முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 3வயது குழந்தையை தவிக்கவிட்டு வங்கி மேலாளர் தற்கொலை - விசாரிக்கும் காவல்துறை

3வயது குழந்தையை தவிக்கவிட்டு வங்கி மேலாளர் தற்கொலை - விசாரிக்கும் காவல்துறை

 மாதிரி படம்

மாதிரி படம்

மோகனூர் சாலையில் தான் வசிக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாமக்கல்லில் தேசிய மயமாக்கப்பட்ட  கனரா வங்கி பெண் மேலாளர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சனா மோகன் (30). இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அஞ்சனாவுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக  விடுமுறையில் கேரளா சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று காலை மோகனூர் சாலையில் தான் வசிக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஞ்சனா தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் அவருடன் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சக நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.  போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.

செய்தியாளர்: ரவிக்குமார் ( நாமக்கல்)

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime News, Death, Suicide attempt