• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொதிக்கும் எண்ணெய்யை தலையில் ஊற்றி கணவனை கொலை செய்த மனைவி

கொதிக்கும் எண்ணெய்யை தலையில் ஊற்றி கணவனை கொலை செய்த மனைவி

கணவனை கொலை செய்த பெண்

கணவனை கொலை செய்த பெண்

குடிபோதையில் தகராறு செய்து வந்த கணவனை கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

  • Share this:
    நாமக்கல்லில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ். பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (50). இவரது மனைவி செல்வராணி (45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தங்கராஜ் தையல் வேலை செய்து வந்துள்ளார். மதுவுக்கு அடிமையான தங்கராஜ் தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    செல்வராணி சாலையில் பலகாரக்கடை நடத்தி வருகிறார். பலகாரம் விற்று அவர் சேமித்து வைக்கும் காசையும் தங்கராஜ் எடுத்து சென்று மது குடித்து வந்துள்ளார். இதன்காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு வந்துள்ளது. இதில் செல்வராணியை தாக்கியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கணவரின் கொடுமையை ஒருகட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் பலகாரம் செய்ய வைத்திருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து கணவரின் தலைமீது ஊற்றியுள்ளார். கொதிக்கும் எண்ணெய் ஊற்றியதால் தங்கராஜ் வலியால் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த நாமக்கல் போலீஸார் மனைவி செல்வராணியை கைது செய்தனர்.

    செய்தியாளர்: ரவிக்குமார் ( நாமக்கல்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: