Home /News /tamil-nadu /

மறைந்த அம்மாவுக்கு கோயில் கட்டி வழிபடும் மகன்கள்… நாமக்கல்லில் நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

மறைந்த அம்மாவுக்கு கோயில் கட்டி வழிபடும் மகன்கள்… நாமக்கல்லில் நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

நாள்தோறும்  தாயாரின் சிலைக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் செய்து குடும்பத்துடன் வழிபட்டு வருகின்றனர்.

நாள்தோறும் தாயாரின் சிலைக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் செய்து குடும்பத்துடன் வழிபட்டு வருகின்றனர்.

நாள்தோறும் தாயாரின் சிலைக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் செய்து குடும்பத்துடன் வழிபட்டு வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்ற தாயின் மறைவால் வாடிய பாசக்கார மகன்கள் அவருக்கு கோயில் கட்டி நாள்தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாவல்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி - அலமேலு தம்பதிக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். 70 வயதான அலமேலு மாரடைப்பால் அண்மையில் மரணமடைந்தார். அவர் மீது அளவற்ற பாசம் கொண்ட மகன்களான முருகேசனும்,  பச்சமுத்துவும் தாயார் இறந்த சோகத்தில் மனம் உடைந்து போனதுடன், அமைதியைத் தேடி கோயில், கோயிலாக சென்று வந்தனர்.

    ஒரு கட்டத்தில் தாயிற் சிறந்த கோயில் இல்லை என்ற கூற்றுக்கு இணங்க தங்களது தாயாருக்கு கோயில் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து, குடும்பத்தினர் ஒப்புதலோடு, தங்களது தோட்டத்தின் ஒரு பகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் கோயில் கட்டியுள்ளனர். அதில்  இரண்டே முக்கால் அடி உயரத்தில், கருங்கல்லால் ஆன சிலையையும் நிறுவினர்.

    இதையும் படிங்க - இன்று டாஸ்மாக் விடுமுறை... நேற்று ஒரே நாளில் ₹252.34 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

    இதையடுத்து, தங்களது தாயாரின் கோயிலுக்கு வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் செய்து, வழிபட்டு வருவதாக பாசக்கார மகன்கள் கூறுகின்றனர். நாள்தோறும்  தாயாரின் சிலைக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் செய்து குடும்பத்துடன் வழிபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க - சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை... மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    இன்றைய நவீன உலகில், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. அதிலும் கூட்டுக் குடும்பமாக வாழ்வது என்பது அரிதாகவே பார்க்கப்படுகிறது. மேலும், வயதான பெற்றோர் ஆதரவற்ற நிலையில் நிர்கதியாக தவிப்பதையும் ஆங்காங்கே காணமுடிகிறது. இப்படியான சூழலில், பெற்ற தாயின் நினைவாக, அவருக்கு கோயில் கட்டி வழிபடும் முருகேசனையும், பச்சமுத்துவையும் அப்பகுதி மக்கள் ஆச்சரியமாகவே பார்க்கின்றனர்...

    நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக ராசிபுரத்தில் இருந்து செய்தியாளர் சுரேஷ்.
    Published by:Musthak
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி