நாமக்கல் திருச்செங்கோடு அருகே ஆசிரியை கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவன் ரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி.கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன் (வயது 15) . சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார் .இந்நிலையில் நேற்று காலை மாணவன் ரிதுனை பள்ளி ஆசிரியை திட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்து உள்ளார். இதில் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு மாணவனின் மரணத்திற்கு காரணம் தெரியாமல் எந்த ஆசிரியரும் வெளியேறக்கூடாது என பள்ளியின் முன் முற்றுகையிட்டு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு டிஎஸ்பி மற்றும் வெப்படை போலீசார் கிராம மக்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க போவதில்லை என கூறி தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
செய்தியாளர் : ரவிக்குமார் (நாமக்கல்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.