’என் குடும்பத்தின் கடன் ரூ.2.63 லட்சத்தை பிடிங்கோ’: தமிழக அரசுக்கு செக் எடுத்துவந்த நபரால் பரபரப்பு

கடனை அடைக்க வந்த நபர்

தனது குடும்பத்தின் மீது உள்ள ரூ.2.63 லட்சம் கடன் தொகையை செலுத்துவதற்காக காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து  நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரமேஷ் தியாகராஜன் சென்றார்.

 • Share this:
  தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் இருப்பதாக வெள்ளை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்த நிலையில், தனது குடும்பத்தின் கடனை அடைக்க காசோலையுடன் வந்த நபரால் நாமக்கலில் பரபரப்பு ஏற்பட்டது.

  தமிழகத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் தமிழக அரசுக்கு ரூ. ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பது வெள்ளை அறிக்கைமூலம் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க: திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய புகார்: நடிகர் ஆர்யா போலீசில் ஆஜர்


  இந்நிலையில், நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த காந்தியவாதி இளைஞரான ரமேஷ் தியாகராஜன் என்பவர் தனது குடும்பத்தின் மீது உள்ள ரூ.2.63 லட்சம் கடன் தொகையை செலுத்துவதற்காக காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து  நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். கோட்டாட்சியர் மு‌.கோட்டை குமார், அந்த இளைஞர் வழங்கிய காசோலை அட்டையை வாங்க மறுத்துவிட்டார். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்குமாறு அவர் தெரிவித்து விட்டார். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு ரமேஷ் தியாகராஜன் சென்றார்.  எனினும், இளைஞர் ரமேஷ் வழங்கிய காசோலை அட்டையை மாவட்ட ஆட்சியரும் ஏற்க மறுத்து விட்டார்.

  இதையும் படிங்க: பாதி விலையில் விற்கப்படும் காலாவதியான உணவுப் பொருட்கள்!

  Published by:Murugesh M
  First published: