ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடிபம்பை அகற்றாமல் தார் சாலை அமைப்பு: அரசின் அலட்சிய செயல்

அடிபம்பை அகற்றாமல் தார் சாலை அமைப்பு: அரசின் அலட்சிய செயல்

அகற்றப்படாத அடிபம்ப்

அகற்றப்படாத அடிபம்ப்

தார் சாலையில் பாதி புதைந்த நிலையில் அடி பம்ப் காட்சியளிக்கிறது. அந்தப் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் அடிபம்ப்பை சரிசெய்யாமல் அப்படியே தார் சாலை  அமைத்தது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடிபம்ப்பை அகற்றாமலேயே நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்துள்ளது. இதனால், அடி பம்ப்  தார் சாலையில் பாதி புதைந்த நிலையில் காட்சியளிக்கிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில், 8வது வார்டு பகுதியில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகே ராசிபுரம் - புதுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் அடிபம்ப் உள்ளது.இதனை இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக அடிபம்ப் செயல்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட நகராட்சிகளின்  பெரும்பாலான பகுதிகளில் தற்போது புரிய தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 8வது வார்டில் உள்ள அடிபம்பை அகற்றாமலும், அதனை சரிசெய்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தாமலும் அப்படியே தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏர்போர்ட் தாக்குதல்:நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இதனால் தார் சாலையில் பாதி புதைந்த நிலையில் அடி பம்ப் காட்சியளிக்கிறது. அந்தப் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்காக  அடிபம்ப்பை சரிசெய்யாமல் அப்படியே தார் சாலை  அமைத்தது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அலட்சியமாக சாலை அமைத்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தாலும் கூட சாலையோரங்களில் விபத்து ஏற்படும் வகையில் இந்த அடிபம்பு தற்போது உள்ளது. அதனை அகற்றி சாலை அமைக்கப்பட்டிருந்தால் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும். எனவே, அந்த அடிபம்பை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் அல்லது அதனை அகற்ற வேண்டும். வீணாக பொதுமக்களின் வரிப்பணத்தை விரையம் செய்யக்கூடது என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க: பொங்கல் தொகுப்பு : டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக்கு எப்போது போகலாம்?

First published:

Tags: Namakkal, Tamilnadu government