Home /News /tamil-nadu /

15 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

15 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி

மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி

Namakkal | நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மங்களபுரம் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக மின்வசதி, குடிநீர் வசதி அடிப்படை வசதிகளின்றி அரசு பள்ளி  மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மங்களபுரம் அருகேயுள்ள குக்கிராமம் தாண்டாகவுண்டன்பாளையம்.  இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இது மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் ஆகும்.

    இந்த பகுதியில் அதிக அளவில் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நிடுநிலைப்பள்ளியில், 1 ம் வகுப்பு முதல் 8 ம் வரை செயல்பட்டு வருகிறது.

    பள்ளியில் தலைமையாசிரியரையும் சேர்த்து மொத்தம் 6 ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 117 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.  இதில் 1 முதல் 5ம் வகுப்புவரையில் 56 மாணவர்கள் பழைய கட்டிடத்திலும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 61 மாணவ மாணவியர்கள்  500 மீட்டர் தொலைவில் உள்ள 2008ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய கட்டிடத்திலும் பயின்று வருகின்றனர்.

    ஆனால், புதிய கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு சுமார் 14 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் இதுவரை கூடுதல் பள்ளி கட்டிடத்திற்கு மின்வசதி, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலும், கழிவறை இருந்தும் தண்ணீர் இல்லாததால், மாணவ , மாணவிகள் 500 மீட்டர் தொலைவில் உள்ள பழைய கட்டிடத்திற்கோ, அல்லது திறந்த வெளிப் பகுதியையோ தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

    மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி


    இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதன் காரணமாக பல பெற்றோர் மாணவர்கள் இப்பள்ளிக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் பாதியிலேயே நிறுத்தப்பட்டு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து குடித்துவிட்டு பாட்டில்களை போட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி


    மேலும், பள்ளியின் அருகே குன்றுப் பகுதிகளில் மாணவிகள் உபாதைகளை கழிக்க செல்வதால், அவர்கள் சமூக விரோதிகள் மூலம் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப் படுவதாகவும், சத்துணவிற்கு வரும் முட்டைகள் சாப்பிடும் குழந்தைகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி மயக்கத்தால் அவதிப்படுவதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

    மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி


    15 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த அவலநிலை குறித்து ஆட்சியர், கல்வித்துறை அலுவலர்கள் என பல அதிகாரிகளிடம் முறையிட்டு இதுவரை ஒரு முறை கூட இந்த பள்ளிக்கு வரவில்லை என்பது கொடுமை என்கின்றனர் பெற்றோர்கள்.

    Must Read : காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடியில் கல்லூரிகளுக்கான புதிய திட்டம் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

    தமிழக முதலமைச்சர் மாணவ மாணவிகளின் நலன் கருதி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தண்ணீர் வசதியும், மின்வசதியும் ஏற்படுத்தித்தர வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

    செய்தியாளர் - சுரேஷ், ராசிபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Drinking water, Government school, Namakkal, School students

    அடுத்த செய்தி