• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

சாலை விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

அரசு பேருந்து ஜப்தி

அரசு பேருந்து ஜப்தி

முப்பத்தொரு லட்சத்தில் பாதி பணத்தை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் கம்பெனியும் மீதித் தொகையை அரசு பேருந்து போக்குவரத்துக் கழகமும் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக 15 லட்சம் தொகையை அரசு கட்டவில்லை

  • Share this:
    நாமக்கலில்  கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இறந்த நபருக்கு  இழப்பீடு வழங்காததையடுத்து தமிழக அரசுக்கு சொந்தமான பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

    நாமக்கல் அடுத்துள்ள புதன் சந்தையில் கடந்த 2014ம் ஆண்டு அரசு பேருந்து முன் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தப் பேருந்து மதுரையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த  10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    விருதுநகரை சேர்ந்த ஜோதி என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக அவருடைய கணவர் கதிரேசன் தன் மனைவியின் இறப்பிற்கு இழப்பீடு கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விபத்தில் இறந்த ஜோதிக்கு முப்பத்தி ஒரு லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்கிடையில் முப்பத்தொரு லட்சத்தில் பாதி பணத்தை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் கம்பெனியும் மீதித் தொகையை அரசு பேருந்து போக்குவரத்துக் கழகமும் தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக 15 லட்சம் தொகையை அரசு கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: திராவிடத்தின் குற்றப்பத்திரிக்கை; ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம்: ஏ.கே.ராஜன் அறிக்கைக்கு கிருஷ்ணசாமி விமர்சனம்!


    இதையடுத்து இழப்பீடு தொகையை கட்ட தவறிய அரசு பேருந்து  நீதிமன்ற அமீனா முன்னிலையில் ஜப்தி செய்யப்பட்டது. பின்னர் பேருந்தை நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் உதவியுடன் நீதிமன்ற அமீனா எடுத்துச் சென்றார் பேருந்து விபத்தில் இறந்த நபருக்கு 15 லட்சம் நஷ்ட ஈடு கட்டாத அரசு பேருந்து ஜப்தி செய்த சம்பவம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர்: ரவிக்குமார்- நாமக்கல்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: